UPDATED : அக் 18, 2026 06:57 PM
ADDED : அக் 18, 2026 06:55 PM
வேலுார்: வேலுார் அரசு மருத்துவமனை அருகே, விளம்பர பேனர் கட்டியபோது, மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த தொழிலாளி சுரேஷ், 32, பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வரக்கூர் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். பேனர் கட்டும் தொழிலாளி. இவர், அக்., 16ம் தேதி, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே, ஒரு ஹோட்டலின் விளம்பர பேனரை கட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியே சென்ற மின்சார ஒயர் மீது, எதிர்பாராத விதமாக அவரது கை பட்டது. இதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, வேலுார் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலுார் தாலுகா போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
