ADDED : அக் 18, 2026 06:57 PM
காட்பாடி: திருப்பதியில் இருந்து அரசு பஸ்சில், 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த கணேஷ், 30, என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ். பனியன் கம்பெனி தொழிலாளி. இவர், திருப்பூரில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சப்ளை செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இதேபோல் கணேஷ், திருப்பதி சென்று கஞ்சா வாங்கிக்கொண்டு அரசு பஸ்சில், வேலுார் கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடி வழியாக திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலுார் போதைப்பொருள் தடுப்பு போலீசார், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் அந்த பஸ்சை நிறுத்தி கணேஷின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், அவர் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வழக்கு பதிந்த போலீசார், கணேசை கைது செய்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
