ADDED : மார் 19, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்,: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலாளி மாரிமுத்து 48, வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சிவகாசி தாலுகா அருணாசலபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் நேற்றிரவு 7:00 மணியளவில் தனது கிராமத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது வழிமறித்த மர்ம கும்பல் சராமாரியாக வெட்டியதில் இவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்தை விருதுநகர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயகுமார் பார்வையிட்டனர். கொலைக்கான காரணம் குறித்து மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

