கோட்டக்குப்பம் வாழைத்தோப்பில் அழுகிய நிலையில் தொழிலாளி உடல் மீட்பு
கோட்டக்குப்பம் வாழைத்தோப்பில் அழுகிய நிலையில் தொழிலாளி உடல் மீட்பு
ADDED : மே 15, 2025 02:49 AM
கோட்டக்குப்பம்:கோட்டக்குப்பம் அருகே வாழைத்தோப்பில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலுார் கனகனந்தல் நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 55; குடிப்பழக்கம் உடையவர்.
இவர் கீழ்புத்துப்பட்டு அருகில் உள்ள எல்லத்தரசு விஜயராமன் என்பவரின் கோழிப்பண்ணையில், கடந்த 40 நாட்களாக கூலி வேலை செய்தார். கடந்த 9ம் தேதி கோழிப்பண்ணையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்திருந்தார்.
கோழிப்பண்ணை உரிமையாளர், கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது மகன் கோழிப்பண்ணையை சுற்றி தேடி பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தியை காணவில்லை.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் அழுகிய நிலையில் கிருஷ்ணமூர்த்தி உடல் கிடந்தது. கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.