தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செல்ல பிராணிகளுக்கும் உலக தரத்தில் சிகிச்சை

செல்ல பிராணிகளுக்கும் உலக தரத்தில் சிகிச்சை

செல்ல பிராணிகளுக்கும் உலக தரத்தில் சிகிச்சை


ADDED : பிப் 08, 2024 09:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 09:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'மனிதர்களை போல, செல்லப் பிராணிகளுக்கும் நவீன சிகிச்சை அளிக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக, டாக்டர் எம்.ஜி.ஆர்., அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை வேந்தர் கீதாலட்சுமி பேசினார்.

செல்லப் பிராணிகளின் சிகிச்சை முறைகளில் நவீன வளர்ச்சி பற்றி, கால்நடை டாக்டர்களுக்கான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியில் நேற்று துவங்கியது.

கருத்தரங்கில், கிராமப்புறங்களில் உள்ள கால்நடை டாக்டர்களுக்கு, நவீன சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில், டாக்டர் எம்.ஜி.ஆர்., அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை வேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:

மனிதர்களுக்கு இணையாக செல்லப் பிராணிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என, அவற்றை வளர்ப்போரிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரி, 120 ஆண்டுகள் பழமையானது.

இந்த மருத்துவமனையில், 'அல்டராசவுண்ட், எண்டோஸ்கோபி, சிடி ஸ்கேன்' போன்ற நவீன வசதிகள் உள்ளன. சிறுநீரக நோய், இதய நோய், எலும்பு முறிவு, அவசர சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை போன்ற வசதிகளுடன், உலக தரத்தில் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் கால்நடை டாக்டர்களுக்கு, நுண்ணுயிரிகள், நச்சுயிரி கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் செல்ல பிராணிகளுக்கு ஏற்படும் நோய்களை கண்டறியும் முறைகள், அதற்கான சிகிச்சை முறைகள், நவீன அறிவியல் வளர்ச்சி முறைகள் குறித்து கற்று தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கால்நடை சிகிச்சை இயக்குனர் சத்தியமூர்த்தி, கல்லுாரியின் உள்ளிருப்பு வளாக அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us