தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் உலக தமிழ்ச்சங்கம்
தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் உலக தமிழ்ச்சங்கம்
ADDED : ஆக 14, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:உலகில் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் ஈடுபட்டுள்ளது.
உலகில் உள்ள தமிழ் அமைப்புகளை உறுப்பினராக்கி ஒருங்கிணைக்கும் பணியில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் பர்வீன் சுல்தானா ஈடுபட்டுள்ளார்.
இதன் வாயிலாக, தமிழ் வளர்ச்சித் துறையின் அங்கீகாரம் வழங்கப்படுவதுடன், தமிழ் அமைப்புகளுக்கு இடையிலான நட்புறவையும், தமிழ் வளர்ச்சிப் பணி களையும் ஒருங்கிணைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
'https://bit.ly/4mmZ1rS' என்ற இணையதள இணைப்பின் வாயிலாக, தமிழ் அமைப்பு துவங்கிய ஆண்டு, உறுப்பினர்கள் எண்ணிக்கை, தலைவர், செயலர், நடத்தப்படும் நிகழ்ச்சிகள், நோக்கம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து உறுப்பினராகலாம்.
மேலும் விபரங்களுக்கு, 0452 - 2530 799 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.