ADDED : ஜூன் 26, 2024 08:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கீழக்கோட்டை ஸ்ரீ மதுராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தனர்.
இக்கோயில் பெரிய கும்பிடு விழா முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஜமீன்தார் முத்துராஜா தானமாக வழங்கிய குதிரையில் பிருந்தாவன தோப்பில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தியில் பூ சுற்றி, அதில் காதலை கருகமணி வைத்து சிறப்பு வழிபாடு செய்ய கரக ஊர்வலம் நடந்தது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த சிறுவர் முதல் முதியோர் வரை ஏராளமானோர் 'சவுடம்மா தீசுக்கோ' என்ற கோஷத்துடன் மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தபடி வந்தனர். பின் அம்மனுக்கு ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது.

