sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது

/

எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது

3


UPDATED : மார் 16, 2026 03:31 PM

ADDED : மார் 16, 2026 02:38 PM

Google News

3

UPDATED : மார் 16, 2026 03:31 PM ADDED : மார் 16, 2026 02:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்


2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நாடகப் பள்ளி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி மற்றும் சாகித்ய அகாடமி ஆகிய நான்கு தன்னாட்சி அமைப்புகள் இயங்கி வருகிறது. சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் 24 மொழிகளில் உள்ள புத்தகங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இன்று (மார்ச் 16) 24 மொழிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.

யார் இந்த ச.தமிழ்ச்செல்வன்


* 1954ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் சண்முகம்-சரசுவதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை பயின்றார். கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார்.

* இவர் சிறுகதைகள், கட்டுரைகள், சிறு நூல்கள், சிறார் இலக்கியம் என பல்வேறு படைப்புகளை உருவாக்கி உள்ளார்.

* எழுத்தாளர் தமிழ்செல்வன், மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்த அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.

மகிழ்ச்சி

விருது அறிவிக்கப்பட்டது குறித்து எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: 2 ஆண்டுகள் உழைப்பின் காரணமாக தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் புத்தகம் உருவானது. 50க்கு அதிகமான படைப்பாளிகளின் கதைகளை வாசித்து உருவாக்கியது. எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. இவ்வாறு ச.தமிழ்ச்செல்வன் கூறினார்.








      Dinamalar
      Follow us