நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழனிசாமியின் மற்றொரு அறிக்கை:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்டப் பூஜை செய்யக்கூட, கோவில் நிர்வாகத்திற்கு பணம் அளிக்க வேண்டும் என, தி.மு.க., அரசு உத்தரவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
நம் முன்னோருக்கு, நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக, மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக, இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற, தி.மு.க., அரசு, ஒரு தவறான முன்னுதாரணத்தை விதைப்பது, எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
எனவே, இந்த முறையற்ற உத்தரவை உடனே திரும்பப் பெற்று, இறைவனுக்கான சேனையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களை தவிர, வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என, முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.

