ADDED : டிச 13, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், எல்.ஐ.சி., நிறுவனம் அறிவித்துள்ள, 'பொன்விழா கல்வி உதவித்தொகை' பெற, வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
'எல்.ஐ.சி., பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டம் - - 2024'ன்படி, டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
கடந்த 2021 முதல் கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான படிப்பை, 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்து, இந்த ஆண்டு கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களுக்கு, 10,000 முதல் 40,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதைப்பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த முழு விபரம், https://licindia.in இணைய தளத்தில் உள்ளது.