ADDED : ஜூன் 03, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக வணிகவரி ஆணையரகத்தின் செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள வணிகர்களின் நலனுக்காக, தமிழக வணிகர் நல வாரியம், 1989ல் துவக்கப்பட்டது. தற்போது, 88,496 உறுப்பினர்கள் உள்ளனர். மதுராந்தகத்தில் நடந்த வணிகர் தின மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவரிடம் வணிகர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையடுத்து முதல்வர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தில் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத வணிகர்கள்; ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்பவர்கள்; வணிகர்நல வாரியத்தில் உறுப்பினராவதற்கான, 500 ரூபாய் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இம்மாதம், 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது; ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.