பழைய செய்தித்தாள், துணிகள் தந்து 'ஸ்மார்ட் பஜாரில்' பொருள் வாங்கலாம்
பழைய செய்தித்தாள், துணிகள் தந்து 'ஸ்மார்ட் பஜாரில்' பொருள் வாங்கலாம்
ADDED : பிப் 13, 2026 01:27 AM

சென்னை: இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான, 'ஸ்மார்ட் பஜார்' நடுத்தர குடும்பங்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், 'ஸ்மார்ட் பஜார் எக்ஸ்சேஞ்ச்' எனும், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
'பழையதை அதிக விலைக்கு விற்பனை செய்யுங்கள், புதியதை மலிவான விலைக்கு வாங்குங்கள்' என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் உள்ள, பழைய செய்தித்தாள், பயன்படுத்திய துணிகள் மற்றும் பழைய பாத்திரங்களை, 'ஸ்மார்ட் பஜார்' கிளைகளில் கொடுத்து, கிலோவிற்கு 100 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை பெற்றுக் கொள்ளலாம்.
இதைப் பயன்படுத்தி, மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றை வாங்க முடியும்.
'ஸ்மார்ட் பஜார்' நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தாமோதர் மால் கூறுகையில், ''மதிப்பு என்பது குடும்பங்கள் தங்களின் அன்றாட செலவுகளை, சிறப்பாகக் கையாள உதவுவதாகும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை, எளிய முறையில், தங்களின் மாதாந்திர தேவைகளுக்கான சேமிப்பாக மாற்ற, இந்த 'எக்ஸ்சேஞ்ச்' திட்டம் வழிவகுக்கும்,''என்றார்.

