'நீட்' பற்றி தவறான தகவல் பரப்பினால் புகார் அளிக்கலாம்
'நீட்' பற்றி தவறான தகவல் பரப்பினால் புகார் அளிக்கலாம்
ADDED : ஏப் 29, 2025 07:14 AM
சென்னை: 'நீட் தேர்வு குறித்து, தவறான தகவல்களை பரப்புவோர் மீது புகார் அளிக்கலாம்' என, என்.டி.ஏ., என்ற, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
அதன் அறிவிப்பு:
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களை குறிவைத்து, சமூக ஊடகங்களில் பொய் பிரசாரங்கள் நடக்கின்றன. தவறான பயிற்சி அளிப்பது, தவறான தகவல்களை பரப்புவது, தவறான முறையில் வழிநடத்தி, அவர்களின் வெற்றிக்கு வழி வகுப்பதாக கூறுவோரிடம், மாணவர்களும், பெற்றோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீட் வினாத்தாளை முன்னரே வெளியிடுவதாக கூறியும், தங்களை என்.டி.ஏ., அதிகாரிகள் எனவும் கூறி, அங்கீகரிக்கப்படாத வலைதளம், சமூக ஊடகங்கள் வாயிலாக மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, பெற்றோரும், மாணவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுபோன்ற போலிகள் குறித்து, 'https://neetclaim.centralindia.cloudapp.azure.com/Claim/Index' என்ற இணையதள இணைப்பில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.