ADDED : ஏப் 26, 2025 01:29 AM
சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அந்த துறை அமைச்சர் தியாகராஜன் அளித்த பதிலுரை:
தமிழகத்தில் 'டிஜிட்டல் ஆபீஸ்' அதாவது, 'இ -- ஆபீஸ்' முறையில் 41 லட்சம் அரசு கோப்புகளை டிஜிட்டலுக்கு மாற்றம் செய்து, 1.50 லட்சம் அரசு ஊழியர்கள், அவர்களின் பணிகளை முழுதுமாக கணினியிலேயே செய்யும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
தற்போது, மாநிலம் முழுதும், 3,000 இடங்களில் மக்களுக்கு இலவச 'வைபை' சேவை வழங்கப்படுகிறது. ஆட்சிக்கு வரும்போது, 7,000 - 8,000 இ - சேவை மையங்கள் இருந்தன. இன்று 25,000 மையங்கள் செயல்படுகின்றன.
தமிழக, 'பைபர்நெட் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் சார்பில், 57,500 கி.மீ., நீளத்தில், 'ஆப்டிகல் பைபர்' என்ற கண்ணாடியிழை வாயிலாக, 12,525 கிராமங்களுக்கு இணையதள வசதி வழங்கும் பணி, அ.தி.மு.க., ஆட்சியில் சிறிது தாமதமாக நடந்தது.
அதை வேகப்படுத்தி தற்போது 93 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தில் இருந்த குறைகளை சரிசெய்வது சிரமமாக இருந்தது. அதைத்தாண்டி, தற்போது 'டெண்டர்' விடப்பட்டு, முதல்முறையாக எச்.டி., 'செட் டாப் பாக்ஸ்'சுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, கேபிள் ஆப்பரேட்டர் வாயிலாக செயல்பாட்டில் இருக்கிறது.
பஸ் டிக்கெட்களை, இ - சேவை வாயிலாக ஆன்லைனில் வாங்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூடிய விரைவில் தனிநபர் வீடுகளுக்கு ௧00 மெகா பைட்ஸ் வேகத்தில் இண்டர்நெட் இணைப்பு மாதம் 200 ரூபாய்க்கு கட்டணத்தில் வழங்கப்படும்

