மதுரையில் நீருக்கடியில் 'அக்வாரியம்' ஆகாய ஓட்டலில் அமர்ந்து சாப்பிடலாம் * நாளை முதல் ஆரம்பம்
மதுரையில் நீருக்கடியில் 'அக்வாரியம்' ஆகாய ஓட்டலில் அமர்ந்து சாப்பிடலாம் * நாளை முதல் ஆரம்பம்
ADDED : அக் 30, 2025 05:15 AM
மதுரை: மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில், தி ஓஷன் அமைப்பு சார்பில் ரூ.10 கோடி செலவில் நீருக்கடியில் 'அக்வாரியம்' அமைக்கப்பட்டுள்ளது.
முழுவதும் குளிரூட்டப்பட்ட இக்கண்காட்சியில், கடல் படுக்கையின் வண்ணமயமான காட்சிகள், லட்சக்கணக்கான மீன்கள், கடல் கன்னிகள், ஜன்னல் வழியே மனிதனும் மீனும் காதலிக்கும் காட்சி, மனிதனை போன்று 6 அடி நீளம், 80 கிலோ எடையுள்ள, மீன்களின் ராஜாவான 'அரபைமா' மீன்களை சுரங்கம் வழியே அருகில் கண்டுகளிக்கலாம்.
பார்வையாளர்களுக்கு கடலுக்கடியில் நடப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும்.
பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடும் ரோபோடிக் நாய்கள், பாக்கெட் குரங்கை கண்டு மகிழ்வதுடன், 135 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிடலாம்.
ரூ.10 முதல் வீட்டு உபயோக பொருட்கள், சமையல் உபகரணங்கள் வாங்கலாம். பார்க்கிங் வசதி உண்டு.
நுழைவுக் கட்டணம் 5 முதல் 10 வயதினருக்கு ரூ.149, பெரியவர்களுக்கு ரூ. 199.
வார நாட்களில் தினமும் மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை, விடுமுறை நாட்களில் காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை பார்வையிடலாம்.

