sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்லீரல் பாதிப்பால் ஆளே மாறிப்போன 'துள்ளுவதோ இளமை' நடிகர் அபிநய்

/

கல்லீரல் பாதிப்பால் ஆளே மாறிப்போன 'துள்ளுவதோ இளமை' நடிகர் அபிநய்

கல்லீரல் பாதிப்பால் ஆளே மாறிப்போன 'துள்ளுவதோ இளமை' நடிகர் அபிநய்

கல்லீரல் பாதிப்பால் ஆளே மாறிப்போன 'துள்ளுவதோ இளமை' நடிகர் அபிநய்

2


ADDED : மார் 06, 2025 09:06 PM

Google News

ADDED : மார் 06, 2025 09:06 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அபிநய்,43, கல்லீரல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர்,தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறு வெளியிட்ட வீடியோ, சமூகவலைதளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

துள்ளுவதோ இளமை -2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தனுஷ் நடித்த இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கினார். செல்வராகவன் திரைக்கதை எழுதிய இப்படம் தனுஷின் முதல் படமாகும். இந்த படத்தில் தனுஷ் உடன் அபநய், ஷெரின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் அபிநய், தனுஷ் ஷெரின் என மூவருக்குமே ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து அபிநய் ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் எடுபடவில்லை.

2000 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பாலைவன சோலை போன்ற படங்களில் துணை கேரக்டரில் நடித்தார் . அதுபோல துப்பாக்கி, அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் வித்யூக் ஜாம் வால்யூவுக்கு இவர்தான் பின்னணி குரல் வழங்கி இருந்தார். அதேபோல பிஸ்கட் மற்றும் டீ விளம்பரங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது. இவர் கல்லீரல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

மேல் சிகிச்சைக்காக மேலும் தனக்கு 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் அதனால் உதவி செய்யுமாறு உருக்கமாக கேட்டிருக்கிறார். 43 வயதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அபிநய் மாறி இருக்கிறார். அதே போல அவருடைய வயிற்றுப் பகுதி அளவுக்கு அதிகமாக வீங்கி இருக்கிறது. அவருடைய வயிற்றுப் பகுதியில் இருந்து டியூப் மூலமாக சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோக்களை அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.

அபிநய், விரைவில் நலம்பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us