sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இளம் படைப்பாளர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

/

இளம் படைப்பாளர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

இளம் படைப்பாளர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

இளம் படைப்பாளர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : மே 11, 2025 12:42 AM

Google News

ADDED : மே 11, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

'பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி, 'பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது' வழங்கப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழ் மொழியில் சிறந்து விளங்கும், 35 வயதுக்கு மேல் 40 வயதுக்கு உட்பட்ட, ஆண் மற்றும் பெண் இளம் எழுத்தாளர் அல்லது கவிஞர் என, இருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவர்களுக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை, www.tamilvalarchithurai.tn.gov.in/awards மற்றும் http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதனை பூர்த்தி செய்து, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ, நேரிலோ, 23ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு, 044 --28190412, 044- - 28190413 என்ற தொலைபேசி எண்களை, அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us