‘இன்ஸ்டா’ காதலி பேச மறுப்பு தீக்குளித்த வாலிபர் ‘சீரியஸ்’
‘இன்ஸ்டா’ காதலி பேச மறுப்பு தீக்குளித்த வாலிபர் ‘சீரியஸ்’
UPDATED : நவ 21, 2026 09:18 PM
ADDED : நவ 21, 2026 09:16 PM
வாணியம்பாடி: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே, ‘இன்ஸ்டா’ காதலி பேச மறுத்ததால், மனமுடைந்த தினேஷ், 19, என்பவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து, 80 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வாணியம்பாடி அடுத்த, வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர், அப்பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்தார். இவருக்கு, ஈரோடை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்நிலையில் அந்த பெண், தினேஷ் உடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதில் மனமுடைந்த தினேஷ், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில், 80 சதவீதம் பலத்த காயமடைந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து, வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
