sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சி போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ., வீட்டில் புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

/

திருச்சி போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ., வீட்டில் புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

திருச்சி போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ., வீட்டில் புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

திருச்சி போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ., வீட்டில் புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை; 5 பேர் கைது


ADDED : நவ 11, 2025 04:46 AM

Google News

ADDED : நவ 11, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சியில், கொலை செய்ய துரத்தப்பட்ட வாலிபர், பாதுகாப்புக்காக போலீஸ் குடியிருப்பில், எஸ்.எஸ்.ஐ., வீட்டிற்குள் புகுந்த நிலையில், அங்கேயே அவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன், 25; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சங்கீதா.

துரத்தல் நேற்று காலை 8:30 மணிக்கு, தாமரைச்செல்வன் வழக்கம் போல தன் பைக்கில் பணிக்கு புறப்பட்டார்.

அப்போது அவரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் இரு பைக்குகளில் துரத்தியுள்ளது. பீமநகர் போலீஸ் குடியிருப்பு அருகே வந்தபோது, துரத்தியவர்கள் தங்கள் பைக்கால் தாமரைச்செல்வன் பைக் மீது மோதினர்.

இதில், கீழே விழுந்த அவரை அரிவாளால் வெட்டி உள்ளனர்.

உயிரை காப்பாற்றிக் கொள்ள வெட்டுக் காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட ஓடியவர், அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் புகுந்து, ஏ - 9ல் குடியிருக்கும் எஸ்.எஸ்.ஐ., செல்வராஜ் என்பவர் வீட்டிற்குள் புகுந்து உள்ளார்.

அப்போது செல்வராஜ், அவரது மனைவி, இரு குழந்தைகள் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

அதிர்ச்சி அந்த வீட்டில் தாமரைச்செல்வன் புகுந்ததும், அவரை கொலை செய்ய அரிவாளுடன் வந்த ஐந்து பேரும், வீட்டின் உள்ளே புகுந்து அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

இதைப்பார்த்த செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தப்பியோடிய கும்பலில் இளமாறன், 19, என்பவரை, அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போராட்டம் பாலக்கரை போலீசார், தாமரைச்செல்வன் உடலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

இளமாறனிடம் விசாரித்ததில், லால்குடியைச் சேர்ந்த சதீஷ், 30, தன் கூட்டாளிகளான திருவானைக்காவலைச் சேர்ந்த ரவுடி பிரபாகரன், 26, நந்து, கணேசன் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

தாமரைச்செல்வன் உடலை பெற மறுத்த அவரது குடும்பத்தினர், திருச்சி அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி சமாதானப் படுத்தினர்.

உறையூரில் பதுங்கியிருந்த கொலையாளிகள் நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலை நடந்த இடத்தில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் தான், நேற்று திருமண விழாவில் பங்கேற்க திருச்சி வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை காவல் துறையினரின் கைகள் கருப்பு - சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்து, குற்றவாளிகளுக்கு சுத்தமாக குளிர்விட்டு போய்விட்டது. காவல் துறை மீதான மக்களின் நம்பிக்கை அற்று போய்விட்டது. இது, நம் சமூக அழிவுக்கான அறிகுறி. தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு இப்படி சீரழிந்து கிடக்கும்போது, முழுநேர காவல் துறை தலைமை இயக்குநரை இன்னும் நியமிக்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கும் ஆளும் அரசின் ஆணவம் சகித்துக் கொள்ள முடியாதது. - நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்


தி.மு.க., ஆட்சியில் 7,000 படுகொலைகள் கொலைகார கும்பல் எந்த அச்சமும் இல்லாமல், போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரைச்செல்வனை கொலை செய்திருக்கிறது. அதுவும் திருச்சி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இருந்தபோதே இந்த படுகொலை நடந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் எல்லா இடங்களிலும் கொலை சம்பவங்கள் நடக்கின்றன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நான்கு ஆண்டுகளில், 7,000க்கும் அதிகமான படுகொலைகள் நிகழ்த்தப் பட்டுள்ளன. - அன்புமணி, பா.ம.க., தலைவர்


தமிழக முதல்வர் வெட்கி தலைகுனியணும் 'ஸ்டாலின் மாடல்' என்றால் என்ன என்ற கேள்விக்கு, நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே, பதிலாக இருக்கின்றன. காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே, பாதுகாப்பு இல்லாமல் போனதை, முதல்வர் எப்படி விளக்குவார்? காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டும் அளவுக்கு, குற்றவாளிகளுக்கு காவல் துறை மீது பயம் இல்லாமல் போனதற்கு, முதல்வர் ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும். காவலர் குடியிருப்பில் புகுந்து, கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும், தமிழக அரசு கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். - பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்


கொலைக்கான பின்னணி

தாமரைச்செல்வன் மனைவி சங்கீதா, ஓராண்டிற்கு முன் பெயின்ட் கடையில் வேலை பார்த்துள்ளார். அங்கு வேலை பார்த்த லால்குடியை சேர்ந்த சதீஷ், சங்கீதாவுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த தாமரைச்செல்வன், தன் நண்பர்களுடன் சென்று, சதீஷ் வேலை பார்த்த இடத்தில் பெண்கள் முன்னிலையில் அவரை அடித்துள்ளார். இதனால் அவமானமடைந்த சதீஷ், தற்போது ரவுடி பிரபாகரன் உதவியுடன், தாமரைச்செல்வனை கொலை செய்து பழி தீர்த்துள்ளார்.








      Dinamalar
      Follow us