நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது; திருநெல்வேலியில் பயங்கரம்
நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது; திருநெல்வேலியில் பயங்கரம்
UPDATED : டிச 20, 2024 12:35 PM
ADDED : டிச 20, 2024 10:45 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் கீழ நத்தத்தை
சேர்ந்த, சண்முகவேல் மகன் மாயாண்டியை 4 பேர் கும்பல் வெட்டிப் படுகொலை
செய்து விட்டு, தப்பி ஓடினர். பின்னர், 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
மாவட்டம் கீழ நத்தத்தை சேர்ந்தவர் ராஜா மணி. இவர் பட்டியல் சமூகத்தை
சேர்ந்தவர். கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி, இவர் கீழ நத்தத்தில்
ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த போது அதே ஊரை சேர்ந்த கும்பலால் வெட்டி கொலை
செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், கீழ நத்தத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் மாயாண்டி, இசக்கி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில்,
இன்று (டிச.,20) அந்த வழக்கு விசாரணைக்காக, திருநெல்வேலி நீதிமன்ற
வளாகத்தில் கீழ நத்தத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் மாயாண்டி (38 ) என்பவர்
வந்திருந்தார்.
அவரை காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால்
வெட்டிக் கொலை செய்தனர். அவர் இறந்ததை உறுதி செய்த பின் நால்வரும் காரில்
தப்பினர். உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய அரசு
மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில், ராமகிருஷ்ணன், சிவா, மனோ ராஜ், தங்க மகேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அரிவாள், துப்பாக்கி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நீதிமன்ற
வளாகத்தில் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.