உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 15, 2026 10:05 PM
ADDED : அக் 15, 2026 09:28 PM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி:இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த ரஞ்சித் கண்ணன், 26, என்பவருக்கு, 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணுடன் நெருங்கி பழகினார். கடந்த, 2022 ஆக., 26ல் இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்து, பலாத்காரம் செய்துள்ளார்.
இளம்பெண்ணின் தாய் அளித்த புகாரில், மாசார்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ரஞ்சித் கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு துாத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட ரஞ்சித் கண்ணனுக்கு, 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
