அறிவுத்திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்; ஸ்டாலின் பேட்டி
அறிவுத்திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்; ஸ்டாலின் பேட்டி
UPDATED : நவ 04, 2026 02:27 PM
ADDED : நவ 04, 2026 02:02 PM

கோவை காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு படித்து கொண்டு இருந்த மாணவர்களிடம் கலந்துரையாடி நூலகத்தின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அவர் அளித்த பேட்டி: இந்த பெரியார் அறிவுலகத்தை பார்க்க கூடிய ஒரு நல்ல வாய்ப்பு; ஏற்கனவே நாம் வந்து இதை பார்த்து இருந்தாலும், திறந்து வைக்கப்பட்ட பிறகு இன்று பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தது; அதிக கூட்டம் இருந்த காரணத்தினால், நாங்கள் முழுமையாக அனைத்தையும் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இன்னொரு முறை வந்து இதனை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
எனது உள்ளத்தில் தோன்றி இருக்கிறது. தமிழகம் இன்றைக்கு போய் கொண்டு இருக்கும் ஒரு சூழ்நிலையில் திராவிடம் இயக்கம் என்றால் என்ன உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள, இளைஞர்கள், மாணவர்கள் வந்து தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கோட்டூர்புரத்தில் நூலகம் உருவாக்கினார். திராவிட மாடல் ஆட்சியில் என்னுடைய தலைமையின் போது மதுரையில் நூலகம் அமைக்கப்பட்டது.
திருச்சியில் காமராஜர் பெயரில் நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் திறக்கப்படும். கோவையில் அமைந்துள்ள நூலகத்தின் பணி திமுக ஆட்சியில் 99 சதவீதற்கு மேல் முடிந்துவிட்டது. ரொம்ப பாதி பணி மட்டும் முடிந்து இருந்தால் இதற்கும் இந்த அரசு மூடுவிழா நடத்தி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நல்ல வேளை தப்பித்து இருக்கிறது. மற்ற நூலகமும் வர வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
