ADDED : ஆக 28, 2011 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் அதிபர் பதவி க்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் டோனி டான் வெற்றிபெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் அதிபர் பதவிக்காகன தேர்தல் நடை பெற்றது. தேர்தலில் நான்குமுனைப்போட்டி நிலவியது. இதில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் டோனி டான் 7, 269 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டோனி டான் சிங்கப்பூரின் ஏழாவது அதிபராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக அதிபர் பதவி வகித்து வந்த நாதனின் பதவிக்காலம் முடிவடைந்ததைஅடுத்து அங்குதேர்தல் நடைபெற்றது. புதிய அதிபர் வரும் 1-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

