ADDED : செப் 03, 2011 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: அமெரிக்காவின், இரட்டைக் கோபுரத் தகர்ப்பின், பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி, உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வதில், கவனத்துடன் இருக்கும்படி, அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த 2001, செப்., 11ம் தேதி, நியூயார்க்கில் உள்ள இரட்டைக் கோபுரங்கள், அல்-குவைதா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டன.
அச்சம்பவத்தின், பத்தாவது ஆண்டு நிறைவு, இம்மாதம் 11ம் தேதி வருகிறது.இதையடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், 'உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கர்கள், தங்கள் பயணங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியுறவு அமைச்சகத்தின் புதிய எச்சரிக்கையை அறிந்து கொண்டது குறித்து, அமைச்சகத்தின் இணையதளத்தில், பதிவு செய்து கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.

