ADDED : ஆக 24, 2024 02:21 AM
காத்மாண்டு, நேபாளத்தில், நம் நாட்டின் பதிவெண் கொண்ட சுற்றுலா பஸ், ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 27 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து, நம் அண்டை நாடான நேபாளத்துக்கு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பஸ்சில் சுற்றுலா சென்றனர். கஸ்கி மாவட்டத்தின் பொக்காரா என்ற இடத்திலிருந்து, தலைநகர் காத்மாண்டு நோக்கி, சுற்றுலா பஸ்சில் அவர்கள் நேற்று சென்றனர்.
இந்நிலையில், தனாஹுன் மாவட்டத்தில் உள்ள ஐனா பஹாரா என்ற நெடுஞ்சாலையில் பஸ் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மார்ஷியண்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குஉள்ளானது.
இந்த விபத்தில், 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.

