5வது டி20 போட்டி: இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
5வது டி20 போட்டி: இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ADDED : ஜூலை 14, 2024 08:29 PM

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 4 சிக்சர் உட்பட 58 ரன்களை விளாசினார்.
அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் வெஸ்லி -- மருமாணி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முகேஷ் குமார் வீசிய வீசிய ஓவரிலேயே வெஸ்லி டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் பென்னட் களம் புகுந்தார். தொடர்ந்து துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 13 ரன்கள் விளாசப்பட, முகேஷ் குமார் பவுலிங்கில் பென்னட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மையர்ஸ் - மருமாணி கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்த நிலையில், பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 47 ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் 8வது ஓவரை வீச வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்திலேயே மருமாணி 27 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் மையர்ஸ் அதிரடியை கையில் எடுத்தார்.ஆனால் அவரும் சிவம் துபேவை அட்டாக் செய்ய முயன்று 34 ரன்களில் வெளியேறினார்.
ஆனால் அவரும் முகேஷ் குமாரிடம் 13 பந்துகளில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், சிவம் துபே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலமாக இந்திய அணி 4--1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.