ADDED : பிப் 23, 2025 06:30 AM

ஜெருசலேம் : பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து கடந்த 2023 அக்., 7ல் எதிர்பாராத தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேரை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 48,319 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து அமெரிக்கா மற்றும் ஐ.நா., முயற்சியால் ஜன.19 முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் அரசு பாலஸ்தீன கைதிகளையும், ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டனர்.
அதன்படி நேற்று ஹமாஸ் படையினர் ஆறு பேரை விடுவித்தனர். இத்துடன் முதல் கட்டமாக விடுவிக்க ஒப்புக்கொண்ட அனைவரையும் விடுவித்துள்ளதாக ஹமாஸ் கூறியுள்ளது. விடுவிக்கப்பட்டவர்கள் இஸ்ரேல் வந்து தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தனர்.