சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆஸி.,யில் சிறுவர்களுக்கு தடை?
சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆஸி.,யில் சிறுவர்களுக்கு தடை?
ADDED : செப் 11, 2024 06:34 AM

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்பட உள்ளது.
இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, 'பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வலைதளங்களில் தனியாக கணக்குகளை துவக்கி சிறுவர்களும் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில், சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்பட உள்ளது.
இது குறித்து அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூறியதாவது: சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். எந்த வயது சிறுவர்களுக்கு தடை விதிப்பது என்பது குறித்து, வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.