ஹெல்மெட்டை சிக்சருக்கு பறக்க விட்ட கார்லோஸ் பிராத்வெய்ட் வீடியோ வைரல்
ஹெல்மெட்டை சிக்சருக்கு பறக்க விட்ட கார்லோஸ் பிராத்வெய்ட் வீடியோ வைரல்
ADDED : ஆக 26, 2024 07:21 PM

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வெய்ட் நடுவர் தனக்குத் தவறாக அவுட் கொடுத்ததால் ஆத்திரமடைந்து தன் ஹெல்மெட்டை 'பேட்'டால் பவுண்டரிக்கு வெளியே அடித்தது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மாக்ஸ் 60 கரீபியன் 2024 தொடரின் குவாலிஃபையர் 1-ல் இந்தச் சம்பவம் நடந்தது. பிராத்வெய்ட்டின் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் கிராண்ட் கேய்மென் ஜாகுவார்ஸ் அணிக்கும் இடையே ஜாஜ்டவுனில் நடைபெற்ற போட்டியில் ஜொஷுவா லிட்டில் வீசிய ஷார்ட் பிட்ச் பந்து பிராத்வெய்ட்டின் வலது தோள்பட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் செல்ல அவர் அதைப் பிடித்து அப்பீல் செய்ய நடுவர் அவுட் கொடுத்தார்.
பேட்டில் படமால் சென்றது அந்த பந்து. கடும் ஆத்திரமடைந்த பிராத்வெய்ட் பெவிலியனுக்கு திரும்பும் வழியில் தன் மட்டையால் ஹெல்மெட்டை ஒரே அடியில் பவுண்டரிக்கு வெளியே அடித்தார். பிறகு தன் இடத்தை நெருங்கிய போது மட்டையையும் வீசி எறிந்தார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகியுள்ளது.

