போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல்: ஆஸி., எம்.பி., புகார்
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல்: ஆஸி., எம்.பி., புகார்
ADDED : மே 05, 2024 12:29 PM

மெல்போர்ன்: இரவு நேரத்தில் வெளியே சென்ற போது போதை மருந்து கொடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன் என ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து எம்.பி., ஒருவர் புகார் தெரிவித்து உள்ளார். கடந்த ஏப்.,28 ல் அளித்த புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரிட்டானி லவுகா(37) என்ற எம்.பி., கூறியதாவது: இரவு நேரத்தில் வெளியே சென்ற போது போதை மருந்து கொடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன். மருத்துவமனையில் நடந்த சோதனையில் எனது உடலில் போதை மருந்து இருந்தது உறுதியானது. ஆனால், நான் அதனை எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற நிகழ்வு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். பலருக்கு இது போல் நடந்துள்ளதாக புகார் வருகிறது என்றார்.
இது தொடர்பாக குயின்ஸ்லாந்து போலீஸ் கூறுகையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். வேறு யாருக்கும் இதுபோன்று நடந்ததாக தற்போது வரை புகார் வரவில்லை. யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் போலீசாரை அணுகலாம் என்றார்.