ஐரோப்பியன் யூனியன் பார்லி., தலைவராக ரூபர்ட்டா மெட்ஸோலா மீண்டும் தேர்வு
ஐரோப்பியன் யூனியன் பார்லி., தலைவராக ரூபர்ட்டா மெட்ஸோலா மீண்டும் தேர்வு
UPDATED : ஜூலை 16, 2024 08:05 PM
ADDED : ஜூலை 16, 2024 07:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்டராஸ்பெர்க்: ஐரோப்பியன் யூனியன் பார்லிமென்ட் தலைவராக ரூபர்ட்டா மெட்ஸோலா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மால்டா நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த 2022ம் ஆண்டு முதல் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது பதவி காலம் நிறைவடைய உள்ளநிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 720 எம்.பி.க்களில் 624 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். இவர்களில் 564 எம்.பி.க்கள் ரூபர்ட்டா மெட்ஸோலாவிற்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதையடுத்து ஐரோப்பியன் யூனியன் பார்லிமென்ட் தலைவராக மீண்டும் தேர்வு பெற்றார். அடுத்த இரண்டரை ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.