உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 21, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
கொளுத்தும் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க, ‘மனித பிரிஜ்’ சாதனத்தை கிழக்காசிய நாடான ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்தச் சாதனம், தலைநகர் டோக்கியோவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கட்டுமானம், தொழிற்சாலை, வெளிப்புற நிகழ்ச்சிகளில் வேலை செய்பவர்களுக்கு ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பு வராமல் தடுக்க உள்ளே ஒரு நபர் உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கும், வெப்பநிலை 15 டிகிரி செல்ஷியசாக இருக்கும் வகையிலும், இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
