UPDATED : ஆக 08, 2024 09:17 PM
ADDED : ஆக 08, 2024 07:11 PM

டாக்கா, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் இன்று இரவு பொறுப்பேற்றது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின்போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்ததை எதிர்த்து, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டின் முக்கிய அடையாளங்கள், கோவில்கள், வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். விரைவில் பிரிட்டன் செல்ல உள்ளார்.
இதையடுத்து இடைக்கால அரசு அமைப்பதற்காக நடவடிக்கை எடுத்த ராணுவம் , நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், 84, தலைமையில் 15 பேர் உறுப்பினர்களாக கொண்ட இடைக்கால அரசு அமைக்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து டாக்காவில் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது..