ADDED : ஆக 12, 2024 08:41 PM

டெஹ்ரான்: ஈரான் துணை அதிபர் ஜாவித் ஜப்ரி திடீரென தன் பதவியை ராஜினாமா செய்ததால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானின் அதிபராக இருந்த முகமது ரெய்சி, ஜூன் 15ல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அதிபர் பதவிக்கு கடந்த ஜூன் 28 ல் , மற்றும் ஜூலை 05 நடந்த இரண்டு கட்ட தேர்தல்களில் சீர்திருத்தங்களுக்கு ஆதரவான மசூத் பெசஷ்கியான், மொத்தமுள்ள 2.45 கோடி ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுக்கள் பெற்று ஆட்சிக்கு தேவையான பெரும்பான்னமயுடன் ஈரான் அதிபராக பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக ஜாவித் ஜப்ரி பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று துணை அதிபர் ஜாவித் ஜப்ரி திடீரென ராஜினாமா செய்வதாக தன் ‛எக்ஸ்‛ வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில், இவர் முன்மொழிந்த 19 உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக அதிருப்தி அடைந்து, ராஜினாமா முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு பல காரணங்களால் அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

