ADDED : ஆக 20, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டொரன்டோ, வட அமெரிக்க நாடான கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், சுதந்திர தின விழாவை நேற்று முன்தினம் கொண்டாடினர். இதற்காக டொரன்டோவில், 'இந்திய தினம்' என்ற பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் இருந்து இந்த பேரணி துவங்கியது.
சர்ரேவில் உள்ள தொழிற்பேட்டை அருகே இந்த பேரணி வந்தபோது, காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பேரணிக்குள் நுழைந்தனர்.
மூவர்ண கொடியை கிழித்ததுடன், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

