மனசுல பாலை வார்த்தாங்கப்பா...குரங்கு அம்மைக்கு தடுப்பு மருந்து காங்கோவிற்கு அனுப்பியது ஐரேப்பியன் யூனியன்
மனசுல பாலை வார்த்தாங்கப்பா...குரங்கு அம்மைக்கு தடுப்பு மருந்து காங்கோவிற்கு அனுப்பியது ஐரேப்பியன் யூனியன்
ADDED : செப் 06, 2024 08:24 PM

ஸ்டாக்ஹோம்: குரங்கு அம்மை நோய் தடுப்புக்கான மருந்தினை ஆப்ரிக்கா நாடான காங்கோவிற்கு ஐரோப்பியன் யூனியன் அனுப்பி வைத்தது.
எம்பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். முதன்முறையாக, ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் கண்டறியப்பட்டதால், உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.
2022 ம் ஆண்டு முதன் முதலாக ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆப்ரிக்க நாடுகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 517 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்தது.
இந்நிலையில் குரங்கு அம்மைக்கு தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்திருந்தது.இதையடுத்து முதல் கட்டமாக தடுப்பூசிகளை விமானம் மூலம் காங்கோ நாட்டின் கின்ஷஹாசா நகருக்கு ஐரோப்பியன் யூனியன் அனுப்பி வைத்தது.