திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 126 பேர் பலி; 188 பேர் காயம்
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 126 பேர் பலி; 188 பேர் காயம்
UPDATED : ஜன 07, 2025 10:06 PM
ADDED : ஜன 07, 2025 07:23 AM

காத்மாண்டு: திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 126க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 188க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேபாள நாட்டின் லெபுசே என்ற நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் இன்று(ஜன.7) காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்பு வட இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக பீகார், புதுடில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டது.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் நேபாளம் எல்லையில் திபெத்தில் 126 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 188 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

