ADDED : ஆக 03, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்கா, நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுதும் கலவரம் ஏற்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இந்த இட ஒதுக்கீட்டை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு உரிய நீதி வழங்கக்கோரியும், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராகவும் நேற்று 2,000க்கும் மேற்பட்டோர், தலைநகர் டாக்காவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசார் மீது கற்களை வீசி, சில மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில், இருவர் உயிரிழந்தனர்.