அமெரிக்காவில் ‛குவாட்' தலைவர்கள் மாநாடு: பைடனுக்கு பிரியாவிடை
அமெரிக்காவில் ‛குவாட்' தலைவர்கள் மாநாடு: பைடனுக்கு பிரியாவிடை
ADDED : செப் 13, 2024 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்; அமெரிக்காவில் 21-ல் அதிபர் ஜோபைடன் நடத்த உள்ள குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு மற்றும் பிரியாவிடை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன.இந்த அமைப்பின் தலைவர்கள் மாநாடு அமெரிக்காவில் ஜோபைடனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரின் டெலாவ்ரே என்ற இடத்தில் 21-ம் தேதி நடக்கிறது.
இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும் இத்துடன் அதிபர் ஜோபைடனின் பதவி காலம் நிறைவடைவதால், பிரியாவிடை நிகழ்வும் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் குவாட் அமைப்பில் உள்ள உறுப்பு நாட்டின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

