ADDED : ஆக 13, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்,
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி லீசெஸ்டர் சதுக்கம்.
இங்கு, சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்வர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், மர்ம நபர் ஒருவர் நேற்று கத்தி குத்தில் ஈடுபட்டார்.
இதில், 11 வயது சிறுமி மற்றும் 34 வயது பெண் காயம் அடைந்தனர். அங்குள்ள கடை ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றும் அப்துல்லா என்பவர், கத்தி குத்தில் ஈடுபட்ட மர்ம நபரை மடக்கிப் பிடித்தார்.
இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு எதுவும் இல்லை என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

