துணை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சியில் டிம் வால்ஸ் தேர்வு
துணை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சியில் டிம் வால்ஸ் தேர்வு
ADDED : ஆக 07, 2024 02:52 AM

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸ், 60, அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில், நவம்பர் 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, அதிபர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் களம் காண்கிறார். அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஒஹியோ மாகாணத்தின் செனட்டராக உள்ள வேன்ஸ் சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.
டிரம்பை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, தற்போது துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், 59, போட்டியிட உள்ளார்.
இந்நிலையில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக மின்னசோட்டா மாகாண கவர்னர் டிம் வால்ஸ், 60, நேற்று அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதை கமலா ஹாரிஸ், தன் சமூக வலைதளத்தின் வாயிலாக அறிவித்தார்.
ராணுவ அதிகாரியாக பணியாற்றிய டிம் வால்ஸ், 2018ம் ஆண்டு முதல் மின்னசோட்டா மாகாணத்தின் கவர்னராக உள்ளார். ஆசிரியராக தன் பணியை துவக்கிய டிம் வால்ஸ், கால்பந்து பயிற்சியாளராகவு
ம் இருந்தவர்.