ADDED : ஆக 13, 2024 05:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாஸ்கோ: ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் உள்ள 28 கிராமங்களை உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளன. இதற்கு உரிய பதிலடி தரப்படும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாண எல்லைக்குள் நுழைந்த உக்ரைன் படைகள், அங்குள்ள 28 கிராமங்களை கைப்பற்றின. இதை, அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியும், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், அந்த பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தன் படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, குர்ஸ்க் மாகாணத்தில் அத்துமீறி நுழைந்த உக்ரைன் படைகளுக்கு, உரிய பதிலடி தரப்படும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.