அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோபைடன், டிரம்ப் நேருக்கு நேர் விவாதம்
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோபைடன், டிரம்ப் நேருக்கு நேர் விவாதம்
ADDED : ஜூன் 27, 2024 02:18 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி இன்று அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன், டிரம்ப் ஆகிய இருவரும் இன்று நேருக்கு நேராக விவாதம் நடத்துகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் முக்கிய நிகழ்வாக இரு கட்சி அதிபர் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்று அதிபராக தேர்வு பெற்றால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை குறித்து விளக்கம் அளிக்கின்றனர்
குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் , ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.