ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்: இஸ்ரேல் பிரதமர்
ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்: இஸ்ரேல் பிரதமர்
ADDED : ஏப் 18, 2024 10:24 AM

ஜெருசலேம்: ஈரான் விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு நட்பு நாடுகள் வலியுறுத்தி இருந்தது. ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு நட்பு நாடுகள் வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியதாவது: ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் தனது சொந்த முடிவுகளை எடுக்கும். தன்னை பாதுகாத்து கொள்ள தேவையான அனைத்தையும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். ஈரானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுப்பதில் உறுதியாக இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

