1 சென்ட் நாணயம் தயாரிப்பு நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் உத்தரவு
1 சென்ட் நாணயம் தயாரிப்பு நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் உத்தரவு
UPDATED : பிப் 11, 2025 03:04 AM
ADDED : பிப் 11, 2025 03:02 AM

வாஷிங்டன் : அமெரிக்காவின் பழமையான மற்றும் குறைந்த மதிப்புள்ள நாணயங்களில் ஒன்றான, 'பென்னி'யின் தயாரிப்பை நிறுத்தும்படி அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நாளில் இருந்து, அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
அந்த வரிசையில் அந்நாட்டின் மிகவும் பழமையான மற்றும் குறைந்த மதிப்புள்ள, 'பென்னி' என்றழைக்கப்படும், 1 சென்ட் நாணயத்தின் தயாரிப்பை உடனடியாக நிறுத்தும்படி கருவூலத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் 1 டாலரில், 100ல் ஒரு பங்கு மதிப்புள்ள நாணயம் பென்னி என்று அழைக்கப்படுகிறது.
இந்த 1 சென்ட் நாணயத்தை தயாரிக்க, அரசு 2 சென்ட் செலவிடுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அரசின் வீண் செலவுகளை குறைப்பதற்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு முன் வைத்த பரிந்துரையின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2024 நிதியாண்டில் பென்னி தயாரிப்பில் அரசுக்கு 700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாணய தயாரிப்பு துறை அறிக்கை அளித்து உள்ளது.