ஓமனுக்கு செல்ல ஆயிரம் ரூபாயில் சுற்றுலா விசா: " ஆப்பரை " அநுபவியுங்க
ஓமனுக்கு செல்ல ஆயிரம் ரூபாயில் சுற்றுலா விசா: " ஆப்பரை " அநுபவியுங்க
ADDED : செப் 08, 2024 12:09 PM

மஸ்கட் ; சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் அரசு விசா விலை சலுகை வழங்கி உள்ளது.
இந்தியாவின் கொச்சியில் இருந்து விமானத்தில் இரண்டரை மணி முதல் 3 மணி காலத்திற்குள் ஓமன் சென்றடைய முடியும். ஓமனுக்கு இந்தியாவில் இருந்தே அதிகம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த வருகையை அதிகரிக்கும் வகையில் ஓமன் நாட்டு சுற்றுலாவும், இந்திய சுற்றுலா துறையும் இணைந்து ஒரு விசா கால சலுகை வழங்கிட முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஒரு ஆலோசனை கூட்டத்தில் இருநாட்டு அமைச்சக அதிகாரிகள் , சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், விமான நிறுவனங்கள் சார்பில் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதன்படி டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் பிரசார திட்டம் செயல்படுத்த வகுக்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் சுற்றுலா சென்று வர வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே விசா கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இந்த சலுகையை இந்தியர்கள் பயன்படுத்த ஆர்வமாக உள்ளதாக சுற்றுலா வட்டாரம் தெரிவிக்கிறது.