இந்தோனேஷியா கப்பல் கட்டும் தளத்தில் தீ டேங்கர் வெடித்து 10 பேர் பலி
இந்தோனேஷியா கப்பல் கட்டும் தளத்தில் தீ டேங்கர் வெடித்து 10 பேர் பலி
ADDED : அக் 15, 2025 11:25 PM
பதாம்: இந்தோனேஷியாவின் பதாம் தீவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆசி ய நாடான இந்தோனேஷியாவின் தஞ்சுங்குன்காங் துறைமுகத்தில், கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென கப்பலில் தீப்பற்றியது. அந்த தீ பரவியதில், கப்பலில் இருந்த எண்ணெய் டேங்கர் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் தீ க்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கடந்த, 2009ல் கட்டப்பட்ட இந்தக் கப்பலில், கடந்த ஜூன் மாதமும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்; ஐந்து பேர் காயமடைந்தனர். அந்த தீ விபத்து வெல்டிங் பணியின் போது ஏற்பட்ட தீப்பொறி களால் ஏற்பட்டது. அதே கப்பலில் தற்போது மீண்டும் தீ விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின் றனர்.