10 லட்சம் இந்தியர்கள் விசிட்: சிங்கப்பூர் சுற்றுலாத்துறை மகிழ்ச்சி
10 லட்சம் இந்தியர்கள் விசிட்: சிங்கப்பூர் சுற்றுலாத்துறை மகிழ்ச்சி
ADDED : நவ 13, 2024 09:09 PM

சிங்கப்பூர்: இந்திய சுற்றுலா பயணிகள் வருகை 10 லட்சத்தை எட்டிவிட்டது என சிங்கப்பூர் சுற்றுலாத்துறை இன்று தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் வருகை குறித்து சிங்கப்பூர் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு இரண்டு மாதங்களுக்கு முன்னரே 10 லட்சம் இந்திய சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
சுற்றலாப்பயணிகள் வருகை, எங்களுடைய சுற்றுலாத் துறையில் வலுவான மீட்சியைக் காட்டுகிறது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-421 மும்பையிலிருந்து அக்டோபர் 31 அன்று சாங்கி விமான நிலையத்தைத் அடைந்தபோது இந்த மைல்கல் எட்டப்பட்டது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான இந்தியப் பார்வையாளர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில், மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது என்றனர்.

