போதைப்பொருள் குற்றங்கள் ஒரே நாளில் 1,000 பேர் கைது
போதைப்பொருள் குற்றங்கள் ஒரே நாளில் 1,000 பேர் கைது
ADDED : நவ 15, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொழும்பு:: இலங்கையில் போலீசார் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையில்: நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த மாதம் 30ல், போதைப் பொருளுக்கு எதிரான மிகப்பெரிய பொது இயக்கமான 'எ நேஷன் யுனைடெட்' என்ற இயக்கத்தை, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே துவக்கி வைத்தார். இதன் ஒருபகுதியாக, போலீசாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ஒரே நாளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,056 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சோதனையில், 311 கிராம் ஹெராயின், 1.173 கிலோ கிரிஸ்டல் மெத் ஆம்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்த போலீசார், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வினியோகத்தை ஒழிப்பதே இந்நடவடிக்கையின் நோக்கம் என கூறினர்.

