ADDED : செப் 29, 2024 11:18 AM

காத்மாண்டு: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 112 பேர் பலியாகினர்.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் துணை செய்திதொடர்பாளர் பிஸ்வோ அதிகாரி கூறியதாவது:உயிரிந்தோர் பெரும்பாலும் இமய மலைப்பகுதியை சேர்ந்தவர்கள். இங்கு மட்டும் 66 பேர் உயிரிழந்தனர். காத்மாண்டு பள்ளத்தாக்கில் 34 பேர் உயிரிழந்தனர் என தெரியவந்துள்ளது.
வெள்ளத்தால், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொறுப்பு பிரதமரும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சருமான பிரகாஷ் மான் சிங், அமைச்சர்களுடன் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.